வறட்சி காரணமாக தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்கும் பிரான்ஸ் நகரம்
பிரான்ஸ் நகரமொன்றின் மேயர், தனது நகர மக்கள் பயன்படுத்தும் தண்ணீரின் கட்டணத்தை அதிகரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்கத் திட்டமிடும் நகரம்
பிரெஞ்சு நகரமான Grasseயின் மேயரான Jérôme Viaud, மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் கடினமான நேரங்களில் தண்ணீர் பயன்பாட்டைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எதற்காக இந்த மாற்றம்?
விடயம் என்னவென்றால், பிரான்சில் பல பகுதிகளுக்கு வறட்சி காரணமாக, தண்ணீர் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
Photo by Valery HACHE / AFP
Grasse நகர், தண்ணீர்க் கட்டுப்பாடுகளின் முதல் மட்டமான மஞ்சள் எச்சரிக்கையின்கீழ் உள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை என்பது என்ன?
அதாவது, Grasse நகர மக்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே தங்கள் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சலாம் என்பது போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிரான்சின் 23 பகுதிகளுக்குத் தற்போது தண்ணீர் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆக, மழைப்பொழிவு எப்படி இருக்கும் என்பது தெரியாததால், இருக்கும் தண்ணீரை பத்திரப்படுத்திக்கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான், Grasse நகரில் தண்ணீர் கட்டணம் அதிகரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.