வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ள பிரெஞ்சு நகரங்கள்: பின்னணி
பிரெஞ்சு நகரங்கள் பல, இம்மாதம், அதாவது ஜூலை மாதம் 14ஆம் திகதி நடைபெற இருந்த வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன.
வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து
பிரான்சில், ஜூலை மாதம் 14ஆம் திகதி, Bastille Dayஆக கொண்டாடப்படுகிறது. பிரான்சில் மன்னராட்சிக்கு முடிவு கட்ட காரணமாக இருந்த பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட அந்த நிகழ்வை ஆண்டுதோறும் மக்கள் வாணவேடிக்கைகள் நிகழ்த்திக் கொண்டாடிவருகிறார்கள்.

ஆனால், இந்த ஆண்டு, பிரெஞ்சு நகரங்கள் பல அந்த வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன.
அதாவது, பிரான்சில் ஏற்கனவே வெப்பம் சுட்டெரித்துவரும் நிலையில், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தும்போது, பட்டாசுகளால் காட்டுத்தீ உருவாகிவிடும் அபாயம் உள்ளது.
ஆகவே, காட்டுத்தீயைத் தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு Bastille Day கொண்டாட்டங்களின்போது வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்வதென பிரெஞ்சு நகரங்கள் பல முடிவு செய்துள்ளன.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், இதே ஜூலை 14ஆம் திகதி, Nice நகரில் 2016ஆம் ஆண்டு, Bastille Day கொண்டாட்டங்களின்போது பயங்கரவாதி ஒருவன் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டார்கள், 450 பேர் காயமடைந்தார்கள்.
ஆகவே, பல நகரங்களில் மக்கள் ஜூலை மாதம் 14ஆம் திகதி Nice நகர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுவதால், 13ஆம் திகதி மாலையே Bastille Day கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |