ஹார்முஸ் விவகாரம்: பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட 40 நாடுகள் இன்று மாநாடு
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல உலக நாடுகள் வெவ்வேறு வழிகளில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இணைந்து, ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இன்று (ஏப்ரல் 17) காணொளி மாநாட்டை நடத்துகின்றனர்.
இந்த மாநாட்டில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. இதன் முக்கிய குறிக்கோள்- ஹார்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை மீண்டும் நிலைநிறுத்துவதாகும்.
இதேவேளை, சவுதி அரேபியா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் துருக்கி வெளிவிவகார அமைச்சரை சந்தித்து, ஈரான்-அமெரிக்கா மோதலை குறைக்கும் வழிகளை ஆராய உள்ளனர்.

பாகிஸ்தான் சமீபத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையை எளிதாக்கியதாக பாராட்டப்பட்டது.
இதனிடையே, ஈரான் தனது யுரேனியத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகிவருகிறது.
மேலும், ஈரான்-அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் இறுதியாகும் என்றால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பாகிஸ்தானுக்கு பயணிக்க தயாராகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, லெபனான்-இஸ்ரேல் இடையிலான மோதலில் 10 நாட்களுக்கு போர்நிறுத்தத்தை ட்ரம்ப் அறிவித்துள்ளார். இன்று முதல் அது அமுலுக்கு வருகிறது.
ஆனால், இஸ்ரேல் பாதுகாப்புப் படை தங்கள் நிலைகளில் இருந்து பின்வாங்காது, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த 10 நாட்களும் அங்கேயே நிலைகொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |