Paris FC அணியை சொந்தமாக்கவுள்ள பிரெஞ்சு பில்லியனரின் குடும்பம்
Paris FC கால்பந்து கிளப்பை பிரெஞ்சு பில்லியனரின் குடும்பம் வாங்க முடிவுசெய்துள்ளது.
Paris FC கால்பந்து கிளப்பை வாங்க பிரான்சின் மிகப் பாரிய பில்லியனரும், ஆடம்பர பொருட்களுக்கான பிரபல Louis Vuitton நிறுவனதட்டின் தலைவருமான பெர்னார்ட் ஆர்னால்டின் (Bernard Arnault) குடும்பம் நிறுவனமொன்று பேச்சுவார்த்தைநடத்தியுள்ளது.
அதாவது, பெர்னார்ட் ஆர்னால்டின் குடும்ப நிறுவனமான Agache, Ligue 2 அணியான பாரிஸ் FC-யின் பெரும்பங்கைக் வாங்குவதற்கான தனிப்பட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆர்னால்ட் குடும்பம் 55 சதவிகித பங்குகளை முதற்கட்டமாக கைப்பற்றும்.
மேலும் RedBull நிறுவனமும் 15 சதவிகிதம் பங்குகளை வாங்க பேசுகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012 முதல் பாரிஸ் FC-யின் தலைவராக உள்ள Pierre Ferracci தனது 30 சதவிகித பங்குகளை 2027-ஆம் ஆண்டில் ஆர்னால்ட் குடும்பத்திடம் ஒப்படைப்பார் என்றும் இதன்மூலம் அந்த நேரத்தில் Agache நிறுவனத்தின் பங்கு 85 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Agache நிறுவனத்தின் அறிவிப்பில், "பெரும்பங்குதாரராக நுழையும் Agache, அணியின் வெற்றிகளைப் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும்" எனவும், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்காக சிறந்த இலக்குகளை நோக்கி செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிஸ் FC-யின் பெறுமானத்தை உயர்த்தி, பிரான்ஸ் கால்பந்தின் உள்கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை, பிரெஞ்ச் லிகின் ஆதிக்கம் Qatar Sports Investments நிறுவனத்தின் ஒத்துழைப்பில் Paris Saint-Germain (PSG) அணியிடம் இருந்தது.
இந்த ஒப்பந்தம் முடிவடையும்போது, பாரிஸ் FC அணி முதல் தரக்கோட்டில் போட்டியிடும் திறனை மேம்படுத்தும் முயற்சிகளில் ஆர்னால்ட் குடும்பம் முனைப்புடன் செயல்படும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France richest man, Bernard Arnault family company to buy Paris FC football club, Bernard Arnault family, Red Bull, Paris FC football club