மகளை பற்றி தவறாக கூறி செல்போன் அழைப்பில் மோசடி.., அதிர்ச்சியில் தாய் மாரடைப்பால் மரணம்
மகளை பற்றி தவறாக கூறி செல்போன் அழைப்பில் மோசடி செய்த நபரால் தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய் மரணம்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் மாலதி வர்மா (58). இவர், ஆக்ராவில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, கல்லூரியில் படிக்கும் ஒரு மகளும், மற்றொரு மகளும் உள்ளனர்.
இவருக்கு கடந்த 30 -ம் திகதி அன்று செல்போனில் வாட்ஸ்அப் அழைப்பு வந்துள்ளது. அப்போது, அந்த எண்ணின் ப்ரொபைல் படத்தில் பொலிஸ் உடை அணிந்த ஒருவரின் புகைப்படம் இருந்துள்ளது.
இவர் போனை எடுத்து பேசிய போது எதிர்பக்கத்தில் இருந்த நபர், "உங்களின் மகள் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது பொலிஸில் சிக்கியுள்ளார்.
நான் சொல்லும் எண்ணிற்கு ரூ.1 லட்சம் பணம் அனுப்பினால் வழக்கு இல்லாமல் பார்த்து கொள்வேன். பணம் வந்ததும் உங்களின் மகள் திரும்பி வந்துவிடுவார்" என்று கூறியுள்ளார்.
இதனால் பதற்றம் அடைந்த மாலதி மகளுக்கு போன் செய்து வாட்ஸ் எண்ணை கூறியுள்ளார். அந்த நம்பர் +92 என்று தொடங்கியதால் அது போலி அழைப்பு என்று மகள் கூறி தாயை ஆறுதல் படுத்தியுள்ளார்.
மேலும், கல்லூரியில் இருக்கும் சகோதரிக்கு போன் செய்து அவர் பத்திரமாக இருப்பதை தாயிடம் கூறினார். பின்னர், பதற்றத்தில் இருந்த மாலதி வீட்டிற்கு வந்ததும் நெஞ்சு வலியால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, மாலதியின் குடும்பம் புகார் அளித்த நிலையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |