பிரிட்டிஷ் மோசடி பேர்வழிக்கு பிரான்சில் 6 ஆண்டு சிறை! வெளிச்சம் போட்டு காட்டிய நெட்பிக்ஸ் ஆவணப்படம்
பிரித்தானியாவை சேர்ந்த மோசடி நபருக்கு பிரான்ஸில் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
6 ஆண்டுகள் சிறை தண்டனை
பிரித்தானியாவை சேர்ந்த மோசடி நபர் ராபர்ட் ஹெண்டி-ஃப்ரீகார்ட்-க்கு(Robert Hendy-Freegard) பிரான்சில் தற்போது 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு பயந்து பொலிஸ் அதிகாரிகள் மீது காரை மோதியதால் இந்த புதிய தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
53 வயதான ஹெண்டி-ஃப்ரீகார்ட், பிரான்சின் கிராமப்புற பகுதியில் போலி பெயரில் வசித்து வந்ததாகவும், அங்கு சட்டவிரோதமாக பீகிள் நாய்களை வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அவரது நடவடிக்கைகளில் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர், மேலும் 2 நெட்ஃபிக்ஸ் ஆவணப்படங்கள் அவரது மோசடியின் கடந்த காலத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன.
கைதுக்கு பிறகு குரேட் நகரில் நடந்த விசாரணையின் போது, ஹெண்டி-ஃப்ரீகார்ட் தன்னை தானே வழக்கறிஞராக முன்னிறுத்தியுள்ளார்.
அத்துடன், தனது நடவடிக்கைகள் ஆக்கிரமிப்பு அல்ல என்றும், பொலிஸாரின் மீது வாகனத்தை மோத செய்த போது அதிகாரிகளால் விசாரிக்கப்படும் வாய்ப்பை நினைத்து மிகுந்த பதட்டத்தால் அவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 ஆண்டுகள் பிரித்தானியாவில் சிறைத் தண்டனை
ராபர்ட் ஹெண்டி-ஃப்ரீகார்ட் என்ற பிரிட்டிஷ் மோசடி நபர், முன்னதாக பிரித்தானியாவில் நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஹெண்டி-ஃப்ரீகார்ட் MI5 உளவாளி போல் நடித்து, பெண்கள் மற்றும் மாணவர்களிடம் சுமார் £1 மில்லியன் மோசடி செய்துள்ளார்.
ஆரம்பத்தில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், பின்னர் சில குற்றச்சாட்டுகள் மேல்முறையீட்டில் ரத்து செய்யப்பட்டதால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |