விசா மறுக்கப்பட்ட ரசிகர்களுக்கு இலவச TV., அர்ஜென்டினா நிறுவனத்தின் ஆஃபர்
2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நேரில் காண அமெரிக்காவிற்கு செல்ல விரும்பிய பல ரசிகர்களுக்கு விசா மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால், அர்ஜென்டினாவின் முன்னணி மின்னணு சாதன நிறுவனமொன்று, ரசிகர்களுக்கு ஆச்சரியமான சலுகையை அறிவித்துள்ளது.
அந்த நிறுவனம், "உங்களுக்கு அமெரிக்க விசா கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உலகக்கோப்பையை உங்கள் வீட்டிலேயே அனுபவிக்க இலவச TV வழங்குகிறோம்" என்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsan எனும் அந்த நிறுவனம் உள்ளூர் தயாரிப்பான 32 இன்ச் Noblex Roku TV-ஐ இலவசமாக வழங்குகிறது. இந்த அறிவிப்பு, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், விசா மறுக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்கும் ரசிகர்கள், இலவச TV பெற தகுதியுடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலம் உலககோப்பையை நேரடியாக பார்க்க முடியாத ரசிகர்கள் குறைந்தது வீட்டிலேயே பெரிய திரையில் போட்டிகளை காணும் வாய்ப்பு பெறுகின்றனர்.
இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர்களின் மனத்தில் நல்ல பெயரை ஏற்படுத்தும் வகையில் மிகச் சிறந்த மார்க்கெட்டிங் யுக்தியாகக் கருதப்படுகிறது.
உலகக்கோப்பை காலத்தில் தொலைக்காட்சி விற்பனை அதிகரிக்கும் நிலையில், இலவசமாக வழங்கும் திட்டம் நிறுவனத்திகற்கு பெரும் விளம்பர பலனையும் தருகிறது.
மேலும், அமெரிக்காவின் விசா கொள்கை குறித்து பல ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை வெளியிட்டுவருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், Newsan நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, ரசிகர்களுக்கு நிம்மதியையும், உலகளாவிய கவனத்தையும் பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |