பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? வெளியானது கருத்து கணிப்பு முடிவு
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் மற்றும் 2வது சுற்றுக்கான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தற்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருக்கும் மக்ரோனின் பதவிக்காலம் 2022 மே 13ம் திகதியுடன் முடிவடைகிறது.
எனவே பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று 2022 ஏப்ரல் 10ம் திகதி நடைபெறவிருக்கிறது. 2வது சுற்று 2022 ஏப்ரல் 24ம் திகதி நடைபெறவுள்ளது.
முதல் சுற்றில் எந்த ஒரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால், அதாவது 50 சதவித வாக்குகளுக்கு மேல் பெறவிட்டால், 2வது சுற்று தேர்தல் நடைபெறும்.
முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வேட்பாளர்கள் மட்டும் 2வது சுற்றில் போட்டியிடுவார்கள், மற்ற வேட்பாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
இந்நிலைியல், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மக்ரோன் வெற்றிப்பெறுவார் என Harris Interactive for the magazine Challenges கருத்து கணிப்பு தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 10ம் திகதி நடக்கும் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் மக்ரோன் 24% வாக்குகளைப் பெறுவார் என்று கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் மரைன் லு பென், Reconquête கட்சி வேட்பாளர் Eric Zemmour மற்றும் ரிபப்லிகன்ஸ் வேட்பாளர் Valérie Pécresse ஆகியோர் 16% வாக்குகளுடன் சமநிலையில் இருப்பார்கள் என தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 24ம் திகதி நடைபெறும் 2வது சுற்றில் எந்த வேட்பாளருடன் போட்டியிட்டாலும் மக்ரோன் வெற்றிப்பெறுவார் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதாவது, 2வது சுற்றில் Pécresse-ஐ எதிர்கொண்டால் மக்ரோன் 51-49% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவார்.
மரைன் லு பென்னை எதிர்கொண்டால் 55-45% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவார், Eric Zemmour-ஐ எதிர்கொண்டால் 61-39% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவார் என கருத்து கணிப்பு தெரிவிக்கின்றன.