புலம்பெயர்ந்தோர் தொடர்பில் தலைப்புச் செய்தியாகிவரும் பிரெஞ்சுத் தீவு: பின்னணியை விளக்கும் செய்தி
பிரான்சின் கடல் கடந்த பிரதேசமான மயாட் (Mayotte), சமீப காலமாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துவருகிறது. அதற்குக் காரணம், புலம்பெயர்தல்.
புலம்பெயர்ந்தோரை வெளியேற்றத் திட்டம்
மயோட் அதிகாரிகள், அங்கு வாழும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்த தீவில் வாழும் புலம்பெயந்தோரில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாட்டவர்கள். மயாட் தீவு மக்கள், இந்த புலம்பெயர்ந்தோரால் தாங்கள் வறுமைக்கு ஆளாகிவருவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆகவே, பிரான்ஸ் அரசு, மயாட் தீவில் வாழும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை அகற்றும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. அங்கு பொலிசாரும் துணை இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
Photo by Gregoire MEROT / AFP
புலம்பெயர்ந்தோர் கூறுவது என்ன?
நாங்கள் இங்கு 20 முதல் 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், எங்களை வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்கிறார்கள் புலம்பெயர்ந்தோர்.
அவர்கள் அருகிலுள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதையடுத்து, அருகிலுள்ள நாடுகள் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனாலும், அவர்களை அகற்றியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டுள்ளார்கள் அதிகாரிகள்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் உட்பட பல இடங்களில் மக்கள் பேரணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.