உணவு டெலிவரிக்கு தயாராகும் பிரான்ஸ் அஞ்சல் துறை! 65,000 வேலைகளின் நிலை என்ன?
பிரான்ஸில் கடித தொடர்பு குறைந்து வருவதால் வளர்ந்து வரும் சந்தையான உணவு டெலிவரியில் லா போஸ்ட் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்து வரும் கடித பரிமாற்றம்
பிரான்ஸ் நாட்டில், கைப்பட எழுதப்பட்ட கடிதங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும் காலம் மறைந்து வருகிறது. மின்னஞ்சல் மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்பு ஆதிக்கம் செலுத்தும் இந்த நவீன யுகத்தில், பிரான்ஸ் அஞ்சல் சேவையான லா போஸ்ட்(La Poste) சுவையான மாற்றத்தை சந்தித்து வருகிறது.
லா போஸ்ட்டின் தலைமை செயல் அதிகாரி ஃபிலிப் வால்(Philippe Wahl), கடிதங்களை வழங்குவதிலிருந்து உணவை வழங்குவதற்கு கவனம் செலுத்துவதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்துள்ளார்.
1990 இல் 70 சதவீதமாக இருந்த கடித பரிமாற்றம் 2024 க்குள் 15 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வீழ்ச்சி கடுமையாகத் தோன்றலாம் என்றாலும், லா போஸ்ட் ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
உணவு டெலிவரிக்கு தயாராகிறது பிரான்ஸ் அஞ்சல் துறை!
மாற்று நடவடிக்கையின் முக்கிய பகுதியாக வளர்ந்து வரும் சந்தையான உணவு டெலிவரியில் லா போஸ்ட் கவனம் செலுத்துகின்றனர்.
மருத்துவமனைகள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களுடன் இணைந்து, லா போஸ்ட் ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கு தினசரி 15,000 க்கும் மேற்பட்ட உணவுகளை வழங்கி வருகிறது.
உள்ளூர் கிளைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களின் தற்போதைய வலைப்பின்னலைப் பயன்படுத்தி, 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது தான் லா போஸ்ட்டின் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், "கடிதங்கள் இல்லாத சூழ்நிலையிலும் கூட" பிரான்சின் 65,000 தபால்காரர்களை வேலையில் இருக்க வைக்க முடியும் என்று லா போஸ்ட்டின் தலைவர் ஃபிலிப் வால் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
French post office food delivery, La Poste food delivery, France mail delivery food, Food delivery pivot - French post office, French post office diversification, Evolving postal services, Meal delivery growth, Innovation in the postal industry,