ஐரோப்பிய ஒன்றியத்தை மாற்றுவேன்.. நோட்டோவிலிருந்து பிரான்ஸ் வெளியேறும்! முக்கிய ஜனாதிபதி வேட்பாளர் வாக்குறுதி
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதிலாக ஐரோப்பிய நாடுகளின் கூட்டணி அமைப்பதாக தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் மரைன் லு பென் உறுதியளித்துள்ளார்.
தற்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருக்கும் மக்ரோனின் பதவிக்காலம் 2022 மே 13ம் திகதியுடன் முடிவடைகிறது.
எனவே பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று 2022 ஏப்ரல் 10ம் திகதி நடைபெறவிருக்கிறது.
2வது சுற்று 2022 ஏப்ரல் 24ம் திகதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரீம்ஸில் ஒரு பிரச்சார பேரணியில் உரையாற்றிய தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் மரைன் லு பென், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றால், நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை சீர்திருத்துவோம் மற்றும் அதை ஐரோப்பிய நாடுகளின் கூட்டணியாக மாற்றுவோம் என்று கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் தீவிர விமர்சகருமான லு பென், தனது நிர்வாகம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸின் மதிப்பை உயர்த்துவதற்கு பணியாற்றும் என்று கூறினார்.
நாட்டின் தேசிய நலனைப் பாதுகாக்க மற்றும் பிற நாடுகளின் மோதல்களுக்கு இழுக்கப்படுவதைத் தவிர்க்கவும், நேட்டோவிலிருந்து இருந்து பிரான்ஸ் வெளியேறும் என மீண்டும் மரைன் லு பென் உறுதியளித்தார்