பிரான்ஸ் பாடசாலைக்குள் பெண் ஆசிரியரை பதற வைத்த மாணவன்: இரத்தவெள்ளத்தில் சரிந்த கொடூரம்
பிரான்ஸில் தனியார் பள்ளி ஒன்றில், பட்டப்பகலில் மாணவன் ஒருவன், ஸ்பானிய மொழி ஆசிரியர் ஒருவரை திடீரென்று கத்தியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
பிரான்சின் தென்மேற்கு பகுதியான Saint-Jean-de-Luz பகுதியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 53 வயதான அந்த ஆசிரியருக்கு உடனடியாக அவசர மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் காயங்கள் காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது ஸ்பானிய மொழி பாடம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது தான் 16 வயதான அந்த மாணவன் ஆசிரியர் மீது கத்தியுடன் பாய்ந்துள்ளான். குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த சக மாணவர்கள் பொலிசாரிடம் தெரிவிக்கையில், அந்த மாணவன் சாத்தானால் தூண்டப்பட்டு தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
இதனிடையே, முதற்கட்ட விசாரணையை முடித்துள்ள பொலிசார், இது பயங்கரவாத செயலாக கருத முடியாது என குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலை முன்னெடுத்த மாணவன் கைது செய்யப்பட்டு, தற்போது Saint-Jean-de-Luz காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியாக உள்ளான்.
@AP
அமைதியான குணம் கொண்டவன்
தாக்குதலின் ஈடுபட்ட மாணவன் மிகவும் அமைதியான குணம் கொண்டவன் எனவும், ஆனால் சமீப நாட்களாக மன அழுத்தம் தொடர்பாக சிகிச்சையில் இருந்து வந்ததாக சக மாணவர்கள் கூறுகின்றனர்.
சுமார் 1,000 மாணவர்கள் பயிலும் அந்த பள்ளியில் எதிர்பாராதவகையில் நடந்த அந்த சம்பவத்தை அடுத்து, மாணவர்கள் அனைவரும் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
@getty
உள்ளூர் நேரப்படி சுமார் 11.30 மணியளவில் குறித்த தாக்குதல்தாரி மாணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.