பிரான்ஸில் டாக்சி ஓட்டுனர்கள் இடையே பேச்சுவார்த்தை: சவாரி ஒன்றுக்கு குறைந்தப்பட்ச ஊதியம் நிர்ணயம்
பிரான்ஸில் தொழிற்சங்கங்களுடனான துறை அளவிலான ஒப்பந்தத்திற்கு பிறகு Uber டிரைவர்கள் சவாரிக்கு ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை பெற தயாராக உள்ளனர்.
குறைந்தபட்ச விலை
பிரான்ஸ் தொழிற்சங்கங்களுடன் ஏற்பட்ட இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், சவாரி ஒன்றுக்கான குறைந்தபட்ச விலையை 27% உயருகிறது. அதனடிப்படையில் சவாரி ஒன்றுக்கு 10.20 யூரோக்கள் அல்லது நிகரமாக 7.65 யூரோக்கள் ($8.25) என்று Uber தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் டாக்ஸி ஆப் டிரைவராக பணிபுரியும் AVF-இன் பிரதிநிதியான யாசின் பென்சாசி பேசுகையில், "பிரான்சில் இது போன்ற முதல் ஒப்பந்தம் இதுவாகும்" என்று தெரிவித்துள்ளார்.
AFP
அத்துடன் முறையான ஒப்பந்தம் புதன்கிழமை மத்தியானம் முறையாக கையெழுத்திடப்படும் என்றும், பிப்ரவரி முதல் இது அமுலில் வரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற விஷயங்களில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை
பிரான்ஸில் Uber ஓட்டுநர்கள் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பல மாத பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஒற்றை சவாரிக்கான குறைந்தபட்ச விலையை உயர்த்தி உள்ளனர்.
GETTY IMAGES
பிரான்ஸ் தொழிற்சங்கங்களான CFTC, UNSA மற்றும் தொழில்முறை சங்கங்களான AVF, FNAE ஆகியவற்றுடன் இந்த ஒப்பந்தத்திற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
இது பிரான்சில் உள்ள அனைத்து டாக்ஸி செயலிகளுக்கும் பொருந்தும் என்று அந்த நிறுவனங்கள் தனி அறிக்கையில் ஒன்றில் தெரிவித்துள்ளன.
பாரம்பரிய டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் டாக்சி ஆப் நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட பல வருட மோதல்களுக்குப் பிறகு பிரான்ஸ் அரசாங்கத்தால் தூண்டப்பட்ட பேச்சுவார்த்தை இதுவாகும்.