இரண்டு நண்பர்கள்... 50 பசுக்களை வாங்கி: உருவாக்கிய ரூ 1380 கோடி நிறுவனம்
டெல்லியை சேர்ந்த இரண்டு நண்பர்கள் 50 பசுக்களை வாங்கி கோடிக்கணக்கான மதிப்புள்ள தொழிலை உருவாக்கியுள்ளனர்.
நண்பர்கள் உருவாக்கிய
டெல்லியில் அப்போது தினசரி பால் நுகர்வு 7 மில்லியன் லிற்றர்களாக இருந்தது, நண்பர்கள் இருவரும் ஒரு நாளைக்கு 100,000 லிற்றர் பால் விற்க வேண்டும் என முடிவு செய்தனர்.
பால் வியாபாரம் என்பது கடினமான தொழில். பசுக்களைப் பராமரிப்பதில் இருந்து புதிய பால் மற்றும் விநியோகம், அர்ப்பணிப்பு, மிகுந்த கவனம் மற்றும் கடின உழைப்பும் தேவை.
டெல்லியை சேர்ந்த சக்ரதர் கடே மற்றும் நிதின் கௌஷல் ஆகிய நண்பர்கள் உருவாக்கியது Country Delight நிறுவனம். இந்த நிறுவனமானது அன்றாடத் தேவைகளான, பால், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே விநியோகம் செய்து வருகிறது.
கடேவும் கௌஷலும் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்கு முன்பு, இருவரும் பெருநிறுவன வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். கார்ப்பரேட்டில் நிலையான வேலைகளில் இருந்து சொந்தமாகத் தொழில் தொடங்குவது என்ற அவர்களின் முடிவு என்பதே ஆபத்தானது, ஆனால், அப்படி அவர்கள் எடுத்த முடிவு உரிய பலனை அளித்துள்ளது.
IIM பட்டதாரியான சக்ரதர் கடே இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றியுள்ளார். வெறும் ஓராண்டு மட்டுமே பணியாற்றிய கடேவுக்கு, தமக்கான வேலை இதுவல்ல என புரிந்தது.
11 வெவ்வேறு மாகாணங்களில்
இன்ஃபோசிஸ் வேலையை விட்டுவிட்டு Indxx Capital நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இணைந்தார். ஆனால், 2013ல் பெருநிறுவன வாழ்க்கையை உதறிவிட்டு, சொந்தமாக தொழில் செய்யும் முடிவுக்கு வந்தார்.
நண்பரான இன்னொரு IIM பட்டதாரி நிதின் கௌஷலுடன் இணைந்து Country Delight நிறுவனம் தொடங்கினார். தற்போது, இந்த நிறுவனம் பால் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், நெய், பனீர், தயிர், பழங்கள், காய்கறிகள், முட்டை மற்றும் பிற முக்கியமான சமையலறைப் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.
மொபைல் செயலியால் இந்த விற்பனை மொத்தம் நிர்வகிக்கப்படுகிறது. நாட்டின் 11 வெவ்வேறு மாகாணங்களில் 18 நகரங்களில் இவர்களது நிறுவனம் செயல்படுகிறது.
இவர்களின் நிறுவனத்திற்கு 500,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாதத்திற்கு 5 மில்லியன் ஆர்டர்களுக்கு பதிலளிக்கின்றனர். வெளியான தரவுகளின் அடிப்படையில், Country Delight நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 1380 கோடி என்றே தெரிய வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |