தவளை மற்றும் பாம்புகளால் 16 பில்லியன் டொலர் இழப்பு! அதிர்ச்சியூட்டும் அறிக்கை
குறிப்பிட்ட தவளை மற்றும் பாம்பு இனத்தால் உலகப் பொருளாதாரத்தில் 16 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான ஆய்வறிக்கை அதிர்ச்சியை அளிக்கிறது.
வியாழனன்று வெளியிடப்பட்ட ஒரு அறிவியல் ஆய்வறிக்கையின்படி, அமெரிக்க புல் தவளை (American bullfrog) மற்றும் பழுப்பு மர பாம்பு (brown tree snake) ஆகிய இரண்டு இனங்கள், பயிர் சேதம் முதல் மின்சாரம் நிறுத்தம் வரையிலான பல சிக்கல்களை ஏற்படுத்தி, 1986 முதல் 2020 வரை உலகை வியக்க வைக்கும் வகையில் 16 பில்லியன் டொலர் மதிப்பிலான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆய்வறிக்கையை, செக் குடியரசில் உள்ள தெற்கு போஹேமியா பல்கலைக்கழகத்தில் PhD மாணவர் இஸ்மாயில் சோட்டோ வெளியிட்டுள்ளார்.
Images: Bryan Fry and Invasive Species Council of British Columbia
2 பவுண்டுகள் (0.9 கிலோ) எடையுள்ள லித்தோபேட்ஸ் கேட்ஸ்பியானஸ் எனப்படும் பழுப்பு-பச்சை தவளை ஐரோப்பாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
Boiga irregularis அல்லது பழுப்பு நிற மரப்பாம்பு என்று அழைக்கப்படும் இந்த பாம்பு இனம், குவாம் மற்றும் மரியானா தீவுகள் போன்ற பசிபிக் தீவுகளில் வேகமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டது.
Image: Invasive Species Council of British Columbia
அங்கு இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கப் படைகளால் இந்த பாம்பு இனம் விடப்பட்டன. இவ்வகை பாம்புகள் ஒரு கட்டத்தில் மிகவும் பரவலாக இருந்ததால் அவை மின் சாதனங்களில் விழுந்து இருட்டடிப்பு ஏற்படுத்தியதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு இனங்கள் என்று சொல்லப்படும் இந்த இரண்டு உயிரினங்களும் 24 ஆண்டுகளில் 16 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அக்கணிக்கப்பட்டுள்ளது.
Image: Bryan Fry