பிரித்தானியாவில் உறைந்த ஏரியில் உயிருக்கு போராடிய சிறார்கள்... இரக்கமே இல்லாமல் வீடியோ பதிவு செய்த மக்கள்
பிரித்தானியாவில் உறைந்த ஏரியில் தவறி விழுந்து உதவி கேட்டு கதறிய சிறார்களை காப்பாற்ற அப்பகுதி மக்கள் எவரும் முயற்சிக்கவில்லை என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சிறார்கள் கதறும் காட்சி
குறித்த சிறார்கள் கதறும் காட்சிகளை அப்பகுதியில் சிலர் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகத்தில் தற்போது வெளியிட்டுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
@PA
அந்த காணொளியில், உறைந்த ஏரியில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்த 8, 10 மற்றும் 11 வயதுடைய மூன்று சிறார்களும் உதவிக்கு கதறுவது பதிவாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், கடுமையாக போராடி நான்கு சிறுவர்களை உயிருடன் மீட்டனர். ஆனால் அவர்கள் நால்வருக்கும் மாரடைப்பு ஏற்பட்டிருந்தது என மருத்துவ சோதனையில் தெரியவர, அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டது.
இருப்பினும், அதில் மூவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். 6 வயதுடைய நான்காவது சிறுவன் தற்போதும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
குடும்பங்களை மேலும் துயரத்தில்
அதிர்ச்சியை ஏற்படுத்தும் அந்த காணொளி வெளியானாலும், சம்பவம் நடந்த பகுதியில் பொதுமக்கள் எவரும் செல்லாதவாறு பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
@getty
சோலிஹல் பகுதியில் நடந்த இந்த துயர சம்பவமானது காணொளியாக சமூக ஊடகங்களில் பகிரப்படுவது தொடர்புடைய குடும்பங்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், குறித்த காணொளியை பொதுமக்கள் எவரும் பகிரவே குழப்பத்தை ஏற்படுத்தவோ வேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற செயல், ஏற்கனவே காயம்பட்டுள்ள குடும்பங்களுக்கு துயரத்தை மட்டுமே அளிக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.