முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின்
ஐரோப்பாவில் முடக்கப்பட்டுள்ள நிதியை உக்ரைனுக்கு பயன்படுத்தும் முடிவைக் கைவிடவில்லை என்றால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போரில் தோற்றுவிடும்
ஆனால், அந்த நிதியில் இருந்து உக்ரைனுக்கு உதவும் பொருட்டு ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததுடன், வாக்குறுதி அளித்தபடி உக்ரைனுக்கு ஐரோப்பா சார்பில் 105 பில்லியன் டொலர் கடனாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் உக்ரைனுக்கு நிதி பற்றாக்குறை அபாயம் ஏற்படும் என்றும், அது ரஷ்யாவிடம் போரில் தோற்றுவிடும் வாய்ப்பு அதிகம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அப்படியான ஒரு சூழல், அந்த கூட்டமைப்புக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை மேலும் இறுக்கமாக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அஞ்சுகிறது.
இதன் காரணமாகவே, உக்ரைனுக்கு 90 பில்லியன் யூரோ அல்லது 105.46 பில்லியன் டொலர் கடனுதவியை அளிக்க ஐரோப்பா முன்வந்துள்ளது.
தண்டனை வழங்கப்படும்
ஆனால், ரஷ்யாவின் முடக்கப்பட்ட நிதியை உக்ரைனுக்காக பயன்படுத்துவது என்பது அப்பட்டமான பகல் கொள்ளை என்றும், கொள்ளையர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் புடின் எச்சரிக்கை விடுத்தார்.

முடக்கப்பட்டுள்ள நிதி விவகாரத்தில், ஐரோப்பியத் தலைவர்களால் ஒருமித்த கருத்துக்கு வர முடியவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், போர் முடிவுக்கு வந்தால், ரஷ்யா கண்டிப்பாக அந்த தொகையை மீட்கும் நடவடிக்கையில் இறங்கும் என்பது உறுதி.
அப்படியான ஒரு நெருக்கடிக்கு ஐரோப்பா சிக்காமல், தற்போது தப்பித்துள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, இது எங்களது மீள்திறனை உண்மையாகவே வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க உதவியாகும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |