பழங்களை மட்டும் சாப்பிடும் உணவு முறை: விபரீதமான டயட் முறையால் 27 வயது பெண் உயிரிழப்பு
பழங்களை மட்டும் சாப்பிடும் உணவு முறையை கடைபிடித்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டயட் உணவு முறையால் பறிப்போன உயிர்
போலந்து நாட்டை சேர்ந்த 27 வயது பெண் கரோலினா க்ரிசாக், பழ உணவு(fruitarian) என்ற உணவு முறையை(Diet) கடைபிடித்ததன் விளைவாக பாலியில் உள்ள விடுதி அறையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான கரோலினா, அவரது உடல் பராமரிப்பு மற்றும் சுகாதாரமான உணவு முறை ஆகியவற்றில் தீவிர நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் பச்சையான பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார், சோதனை முயற்சியாக 19 வயது இந்த உணவு முறையை தொடங்கிய கரோலினா காலப்போக்கில் அதனை தன்னுடைய தீவிர உணவு முறையாக மாற்றிக் கொண்டுள்ளார்.
இதனால் அவருக்கு உடலில் சில உபாதைகளும் ஏற்பட்டுள்ளன, அதில் குறிப்பாக அவரது நகங்கள் மஞ்சள் நிறமாக மாறியதோடு, பற்கள் அழுகத் தொடங்கியுள்ளன.
மேலும் அவர் உயிரிழக்கும் போது அவரது உடல் எடை வெறும் 22 கிலோ மட்டுமே இருந்துள்ளது.
பாலிக்கு சென்ற கரோலினா
2024-ல் திரும்பி கூட படுக்க முடியாத சூழ்நிலையில் கரோலினா க்ரிசாக் பாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு அவர் சிறிது காலமாக தங்கி இருக்கும் நிலையில் விடுதி ஊழியர்கள் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளனர், ஆனால் அதற்கு கரோலினா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இறுதியில் இந்த தீவிரமான உணவு முறை காரணமாக அவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |