பயங்கரவாத குழுவை உருவாக்கி ரஷ்ய அரசை கவிழ்க்க சதி
ரஷ்ய போர் எதிர்ப்பு குழு பயங்கரவாத குழுவை உருவாக்கி அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக FSB பாதுகாப்பு சேவை குற்றம்சாட்டியுள்ளது.
போர் எதிர்ப்பு குழு
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பிறகு, வெளிநாட்டில் நிறுவப்பட்ட ஒரு அமைப்பான ரஷ்ய போர் எதிர்ப்பு குழு மீது, ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.
அதாவது, ஒரு பயங்கரவாத குழுவை உருவாக்கி ரஷ்ய அரசாங்கத்தை கவிழ்க்க இந்த குழு சதி செய்ததாக, மிகைல் கோடோர்கோவ்ஸ்கி உட்பட நாடுகடத்தப்பட்ட முக்கிய போர் எதிர்ப்பு நபர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளில், பயங்கரவாத உக்ரேனிய துணை ராணுவ தேசியவாத பிரிவுகளுக்கு கோடோர்கோவ்ஸ்கி மற்றும் போர் எதிர்ப்பு குழுவின் இணை நிறுவனர்கள் நிதியளிப்பதாகவும், ரஷ்ய அரசை கவிழ்க்க உறுப்பினர்களை நியமிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிகாரத்தைக் கைப்பற்ற
இவற்றின் மூலம் ரஷ்ய அரசாங்கத்தை கலைக்க அந்த குழு அழைப்பு விடுத்ததாக FSB கூறுகிறது. மேலும், ஐரோப்பிய கவுன்சிலில் "ரஷ்ய ஜனநாயகப் படைகளின் தளத்தை" உருவாக்க இந்த அமைப்பு உதவியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரெம்ளின் விமர்சகர் விளாடிமிர் காரா-முர்சா, அரசியல் விமர்சகர் யெகாட்ரினா ஷுல்மான், செஸ் விளையாட்டு வீரர் கேரி காஸ்பரோவ் மற்றும் நன்கொடையாளர் போரிஸ் ஸிமின் ஆகியோரும் இந்த குற்றச்சாட்டுகளில் அடங்குவர்.
ஆனால், போர் எதிர்ப்புக் குழு உக்ரைனின் இராணுவத்திற்கு நிதியளிக்கிறது அல்லது ரஷ்யாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறது என்பதை கோடோர்கோவ்ஸ்கி மறுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |