FSB-யின் நடவடிக்கையில் உக்ரேனியர்கள் இருவர் மரணம்; நால்வர் கைது
FSB says it killed 2 and 4 arrest: உக்ரேனிய நாசவேலை சதித்திட்டம் தொடர்பாக இருவரை கொன்றதாக ரஷ்யாவின் FSB தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் FSB உக்ரேனிய நாசவேலை சதித்திட்டம் தொடர்பாக இருவரை கொன்றதாகவும், 4 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சதித்திட்டம்
ரஷ்யாவின் FSB, காஸ்பியன் கடலில் உள்ள கப்பல்கள், இராணுவ விமான நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக இருவரைக் கொன்றுள்ளது.
மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்த FSB, உக்ரேனிய உளவு வலையமைப்பிற்கு எதிரான நடவடிக்கை இது எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த கைதுகள் மைக்கோப், திக்கோரெட்ஸ்க், கிஸ்லியார் மற்றும் ரோஸ்டோவ்-ஆன்-டான் ஆகிய இடங்களில் நடந்ததாக அந்த அமைப்பு கூறியது.
இந்த ஆண்டு கைது நடவடிக்கைகளின்போது, FSB அதிகாரிகளால் கொல்லப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
