பாகிஸ்தானில் லாக் டவுன்: எரிபொருளை சேமிக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் லாக்டவுன்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் ஊரடங்கு (Lockdown) உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவின் படி, பாகிஸ்தானில் அனைத்து கடைகளும் இரவு 8 மணிக்குள் அடைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பேக்கரிகள், டீக்கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 10 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளையும் 10 மணிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது பெட்ரோல் மற்றும் மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசு முன்னெடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |