ஏர் இந்தியா விமான விபத்து அறிக்கை: எஞ்சின் Fuel Cutoff ஆனது எப்படி? அதிர்ச்சியூட்டும் விசாரணை தகவல்கள்
ஏர் இந்தியா விமானம் (AI171) விபத்துக்கான ஆரம்ப விசாரணை அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 12, 2025 அன்று அகமதாபாதிலிருந்து லண்டன் செல்ல திட்டமிடப்பட்ட போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில விநாடிகளுக்குள் இரு எஞ்சின்களும் நின்றுவிட்டதால், விமானம் கீழே விழுந்தது.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி
இந்திய விமான விபத்து விசாரணை பிரிவு (AAIB) வெளியிட்ட அறிக்கையின் படி, விமானிகள் இருவரும் ‘Fuel Cutoff’ (எரிபொருள் துண்டிப்பு) தொடர்பாக விமானத்தில் உரையாடியுள்ளனர்.
“ஏன் எரிபொருளை நீ கட் செய்தாய்?” என்று விமானி ஒருவர் கேட்டதும், துணை விமானி “நான் அப்படி செய்யவில்லை” என மறுத்துள்ளார்.
என்ன நடந்தது?
புறப்படும் சில விநாடிகளில் இரு எஞ்சின்களும் ஒரு விநாடி இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன
Ram Air Turbine (RAT) எனப்படும் backup energy source இயந்திரம் வெளியே வந்ததால், இது என்ஜின் செயலிழந்ததுவிட்டது என்பது உறுதியாகியுள்ளது
விமானம் ஓடுதளத்தை கடந்து சிறிய உயரம் தான் எடுத்திருந்த நிலையில் என்ஜின் செயலிழப்பு ஏற்பட்டது.
“Fuel Cutoff switch” என்ன செய்கிறது?
Fuel Cutoff switch என்பது எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லும் வழியை கட்டுப்படுத்தும் கட்டுப்பாடு.
அதை "Cutoff" நிலையில் மாற்றும் போது, உடனடி எரிபொருள் நிறுத்தம் ஏற்பட்டு, எஞ்சின் ஒய்வு அடைகிறது. சாதாரணமாக, இது விமானம் தரையிறங்கிய பின் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, அல்லது தீ போன்ற அவசர நிலைகளில் பயன்படுத்தப்படும்.
ஆனால், இதில் எந்தவித அவசரசூழ்நிலையும் இல்லாமல், பறப்பதற்குள் இந்த சுவிட்ச்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது மர்மம்.
விபத்துக்கான காரணம்?
விமானியால் தவறுதலாக இது நடந்திருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க விமான பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்ச்கள் ஒரே நேரத்தில் அல்லாமல், ஒரே விநாடி இடைவெளியில் மாற்றப்பட்டுள்ளன என்பது வழக்கமான விமானிகளின் செயல்முறையை ஒத்திருக்கிறது.
இதனால் “மனித தவறு”, அல்லது “சாதனத் தோல்வி” என்ற இரண்டில் ஒன்று காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Air India crash report 2025, AI171 engine failure reason, Fuel cutoff switch aviation, Air India Boeing 787 crash, Aircraft engine flameout cause