உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலி... பிரித்தானியாவில் புதிய உச்சம் தொட்ட எரிபொருள்
உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலியால் பிரித்தானியாவில் எரிபொருள் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலக எண்ணெய் விலையில் புதிய அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில் பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 156.37 p விற்கப்பட்ட நிலையில், இன்று 158.2 p உயர்ந்துள்ளது.
நேற்று 162.28 p விற்கப்பட்ட டீசல், இன்று 165.24 p விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து RAC எரிபொருள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் Simon Williams கூறியதாவது, 55 லிட்டர் பெட்ரோல் பிடிக்கும் ஒரு காரின் டேங்கை நிறப்ப தற்போது 87 பவுண்டு செலவாகும், இது இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இருந்ததை விட 7 பவுண்டு அதிகம்.
டீசல் காரின் டேங்கை நிறப்ப 90 பவுண்டுக்கு மேல் ஆகும், இது ஜனவரி தொடக்கத்தில் இருந்ததை விட 8 பவுண்டு அதிகம்.
மொத்தவிற்பனை எரிபொருள் விலை ஏற்கனவே இந்த வாரம் வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது, எனவே வரும் நாட்களில் மேலும் பம்ப் விலை உயர்வு தவிர்க்க முடியாதது.
இந்த வாரம் பெட்ரோல் சராசரியாக லிட்டருக்கு 1.60 பவுண்டுக்கு மேல் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது, அதே நேரத்தில் டீசல் விலை மிக விரைவில் 1.70 பவுண்டை எட்டும் என Simon Williams தெரிவித்துள்ளார்.