அரைகுறை ஆடையுடன் 'பெல்லி டான்ஸ்' ஆடி பள்ளி குழந்தைகளை வரவேற்ற ஆசிரியை! வைரலாகும் வீடியோ
ரஷ்யாவில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்களை வரவேற்க, ஆசிரியை ஒருவர் அரைகுறை ஆடையுடன் பெல்லி நடனம் ஆடிய சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரஷ்யாவில் செப்டெம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.
அந்நாட்டில், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாள் 'அறிவு தினம்' (Knowledge Day) என்று அழைக்கப்படுகிறது. அந்நாளில், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்கு திரும்பும் குழந்தைகளை வரவேற்கும் விதமாக, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அதேபோல், நேற்று ரஷ்யாவின் தென்கிழக்கு நகரமான கபரோவ்ஸ்கில் உள்ள பள்ளி எண் 76-ல் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சி தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
7 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றபோது, அங்கு ஒரு இளம் ஆசிரியை அரைகுறை ஆடைகளுடன் 'பெல்லி நடனம்' ஆடியுள்ளார்.
இதை பார்த்த குழந்தைகள் மாற்றும் அவர்களது பெற்றோர் வாயை பிளந்து நின்றுள்ளனர். இந்த நிகழ்வின் வீடியோ இணையத்தில் தீயாக பரவிவருகிறது.
இந்த சம்பவம் உள்ளூர் கல்வி அதிகாரிகளை கோபமடையச் செய்துள்ளது. 'இதுபோன்ற நடனங்களை குழந்தைகளுக்கு முன்னால் நிகழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொருத்தமற்றது' என்று கல்வித் துறை உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதையடுத்து, குறித்த இளம் ஆசிரியையின் செயல்களுக்கு பள்ளி தலைவர் பொறுப்பேற்று, பதிலளிக்க வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு அதிகாரப்பூர்வ சோதனைகள் காத்திருப்பதாகவும் கல்வித்துறை அதன் அறிக்கையில் கூறியுள்ளது.