வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.., தவெக போஸ்டரால் உருவான சர்ச்சைக்கு பதிலடி
தமிழக வெற்றி கழக தலைவர் புஸ்ஸி ஆனந்தை வருங்கால முதலமைச்சர் என்று குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சர்ச்சையான போஸ்டர்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கி அடுத்த ஆண்டில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கவுள்ளார். அதற்கான தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்ற நிலையில், இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பனையூர் கட்சி அலுவலகம் முதல் பொதுகுழுக் கூட்டம் நடைபெறும் இடம் வரை போஸ்டர்களும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
அதில், தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டரில், "தளபதியை பொதுக்குழுவிற்கு அழைத்து வரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் அரசியல் ஆசான், தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் வருக" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த் கூறுகையில், "இது வேண்டுமென்றே சில விஷமிகள் செய்த செயல்.
2026-ம் ஆண்டில் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் வருவார். யாரும் வதந்திகள் பரப்ப வேண்டாம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |