என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பு தாங்கமுடியாத வேதனை! நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார்
கேரளம் மீண்டு வர துணை நிற்போம் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார்.
270க்கும் மேற்பட்டோர்
கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமான நிலையில், நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகின்றனர்.
அங்கு தவித்து வரும் மக்களை மீட்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.
அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி நடிகர், நடிகைகள் பலரும் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் வேதனை
இந்த நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நிலச்சரிவு குறித்து வேதனையை பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ''வயநாடு துயரம், இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணை நிற்போம்'' என தெரிவித்துள்ளார்.
வயநாடு துயரம் , இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை
— G.V.Prakash Kumar (@gvprakash) July 31, 2024
கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |