ரஷ்யாவுக்கு எதிராக முதன்முறையாக களமிறங்கும் ஜி20 நாடுகள்: கடும் நெருக்கடியில் புடின்
இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில், ரஷ்யாவுக்கு எதிராக ஒரே மனதாக தீர்மானம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான தடைகள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனத்தை பெரும்பாலான உறுப்பினர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, உலகப் பொருளாதாரத்தில் நெருக்கடியை அதிகப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
@reuters
மொத்தம் 16 பக்கங்கள் கொண்ட அந்த தீர்மானத்தில், ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கடுமையான திருத்தங்கள் முன்னெடுக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
ஜி20 அமைப்பானது பாதுகாப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான மன்றம் அல்ல என்பதை அங்கீகரித்துள்ளதுடன், பாதுகாப்புச் சிக்கல்கள் உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
@reuters
ஜி20 மாநாட்டில்
ஜி20 தலைவர்களின் கூடுகை முன்னர் உக்ரைன் போரை எவ்வாறு அடையாளப்படுத்துவது என்ற குழப்பத்தில் ஒன்றிணைந்த கண்டனத்தை தெரிவிப்பதில் தோல்வி கண்டது.
ஆனால் தற்போது பாலியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜி20 மாநாட்டில், ரஷ்யாவின் படையெடுப்பால் உலகளாவிய பணவீக்கம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்டவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதை விரிவாக விவாதித்துள்ளனர்.
@reuters
மட்டுமின்றி, காணொளி ஊடாக மநாட்டில் கலந்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதியும், ரஷ்யா முன்னெடுத்திருக்கும் போரினை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய தருணம் இதுவென தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் கண்டனம்
ரஷ்யாவும் ஜி20 மாநாட்டில் கலந்துள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், சில மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மாநாட்டை புறக்கணிக்க இருப்பதாகவும் மிரட்டியது.
@reuters
ஆனால், இந்தோனேசிய நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், ரஷ்யாவும் கலந்துகொள்ள வேண்டும் என உறுதிபட தெரிவித்திருந்தது.
இதனையடுத்து ரஷ்ய தரப்பில் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.