G20 உச்சி மாநாடு: வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்திய உணவுகள்!
ஜி20 கூட்டமைப்பில் கலந்துக்கொள்ள வரவுள்ள வெளிநாட்டு தலைவர்களுக்கு இட்லி, புலாவ், மற்றும் சமோசா, ரசகுல்லா பானிப்பூரி ஆகியவை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜி20 கூட்டமைப்பு
ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பினை இந்தியா எடுத்துள்ளது. வருகிற 9 மற்றும் 10 ஆம் திகதியில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்காக டெல்லி பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
#G20SummitDelhi ||
— All India Radio News (@airnewsalerts) September 5, 2023
Exclusive visuals from #BharatMandapam, which is the venue of #G20 Summit. The summit will begin on Saturday. A 28 feet Nataraja Statue has been installed in front of Bharat Mandapam.#AIRVideo - Dipendra kumar pic.twitter.com/gqB8NChZxA
டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதிகளில் அறைகள் அனைத்தும் தலைவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவர்களுக்கான உணவு முறைகள் குறித்து ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.
பரிமாறவுள்ள உணவுகள்
அவர்களுக்கான உணவு பட்டியலில் சைவ உணவுகளும் இடம்பெற்றுள்ளன. அதில், சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
ஜெய்ப்பூரில் மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் சிறுதானிய உணவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
சிறுதானியங்களால் செய்யப்பட்ட தாளி, புலாவ், இட்லி ஆகியவை முக்கியமாக இடம்பெறும். ராஜஸ்தானின் தால் படி சர்மா, மே.வங்கத்தின் ரசகுல்லா, தென் இந்தியாவின் மசால் தோசை, பீஹாரின் லிட்டி சோக்கா என ஒவ்வொரு மாநிலத்தில் சிறப்பான உணவுகளை பரிமாறவுள்ளனர்.
மேலும் பானி பூரி, சப்பாத்தி சாத், தஹி பல்லா, சமோசா ஆகியவையும் இருக்கும் என்று பலரால் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |