G20 மாநாடு: பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் பொலிஸ் நிலையம்
இந்திய தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
G20 மாநாடு
ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் வரும் 9, 10 ஆகிய திகதிகளில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறிய நிலையில், பல தொழிலதிபர்களும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃப்யுமியொ கிஷிடா, ஜேர்மனி ஜனாதிபதி ஓலஃப் ஷோல்ட்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
மேலும், இரவு விருந்தில் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் G20 தலைவர்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
நடமாடும் பொலிஸ் நிலையம்
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வேன், பொலிஸ் நிலைய வடிவமைப்பில் 5 பேர் உட்காருவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பொலிஸ் நிலையமானது, ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு மற்றும் பொலிசாருடன் சாதாரண பொலிஸ் நிலையம் போல செயல்படும். மேலும், இணைய வசதியும், பொதுமக்களுக்கு செய்திகளை தெரிவிக்கும் இதர வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், 24 மணி நேரம் செயல்படும் இந்த பொலிஸ் நிலையமானது எந்த ஒரு அவசர நிலை என்றாலும் அங்கு செல்லும். ஜி 20 மாநாடு முடிந்த பின்னரும், இந்த நடமாடும் பொலிஸ் நிலையம் செயல்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |