இத்தாலியில் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் திருட்டு: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
Gang of masked men stole luxury red wine in Italy: புகழ்பெற்ற ஒயின் கிடங்கில் இருந்து ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் திருட்டு
இத்தாலியின் கோர்டோனா பகுதியில் அமைந்துள்ள மார்செசி ஆன்டினோரி என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ஒயின் பாட்டில்கள் சேமிப்பு கிடங்கில் இருந்து முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை திருடிச் சென்றுள்ளது.

7 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல் சிசிடிவி காட்சிகளை துல்லியமாக துண்டித்துவிட்டு சுமார் 30,000 சொகுசு ரெட் ஒயின் பாட்டில்களை இரண்டு லொறிகளில் அள்ளிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் Solaia, Tignanello, மற்றும் Guado al Tasso ஆகிய மதிப்புமிக்க தயாரிப்புகளை மட்டுமே குறிவைத்து திருடிச் சென்றுள்ளது.
இந்த மது பாட்டில்கள் சில்லறை விலையில் 150 யூரோக்களில் தொடங்கினாலும், சில அரிதான மற்றும் நீண்ட கால வின்டேஜ் பாட்டில்கள் ஆயிரக்கணக்கான யூரோக்கள் வரை மதிப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒட்டுமொத்தமாக திருடப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பானது பல மில்லியன் யூரோக்களை(4.2 மில்லியன் பவுண்ட்) தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திங்கட்கிழமை காலை ஊழியர்கள் வேலைக்கு வந்த போது தான் மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.