சினிமா பாணியில் நடந்த ரெய்டு! இலங்கைக்கு கடத்த முயன்ற 2090 கிலோ கஞ்சா சிக்கியது எப்படி?
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு 2090 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற, ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடரும் கஞ்சா வேட்டை
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை தடுக்கும் முயற்சியில் தமிழக காவல்துறை, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
@ptdesk
இந்நிலையில், மதுரை மாநகரில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை தடுக்க தனிப்படை அமைத்துள்ளது.
காவல்துறையினருக்கு தகவல்
இதனிடையே மதுரை அருகே வாகனங்களில் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, நடத்தப்பட்ட ஆய்வில் காரின் பின்புறம் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது.
@ptdesk
இதனை தொடர்ந்து பிடிபட்ட கார் ஓட்டுநரிடம் பொலிஸார் விசாரணை நடத்துகையில், ஒரு கும்பல் ஆந்திராவிலிருந்து போலியான பதிவு எண் கொண்ட, வண்டி மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது.
கூடுதல் விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் அருகே உள்ள கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இலங்கைக்கு கடத்த திட்டம்
உடனே அங்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த சரக்கு வாகனங்களை சோதனை செய்துள்ளனர். சோதனையில் சாக்கு மூட்டையில் 2090 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்துள்ளது.
@ptdesk
இதனை தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்த பொலிஸார் நடத்திய விசாரணையில், சாத்தான் குளத்தில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை, கப்பல் மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கஞ்சா கடத்தில் ஈடுபட்டு வரும் முக்கிய குற்றவாளிகளான, ஜெயக்குமார் மற்றும் ஆரோன் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகி்ன்றனர்.
”கஞ்சாவை கடல் வழியாக இலங்கைக்கு கடந்த முயன்றனர், அதில் 4 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம், விரைவில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் ஆரோனை கைது செய்வோம்” என துணை காவல் ஆணையர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.