தென்கொரியாவில் 260 ராட்சத பலூன்களுடன் வந்திறங்கிய மனிதக்கழிவு மூட்டைகள்: அனுப்பியது யார் தெரியுமா?
வடகொரியா, மலம் மற்றும் குப்பை அடங்கிய மூட்டைகளை, ராட்சத பலூன்களில் கட்டி தென்கொரியாவுக்கு அனுப்பியுள்ளதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தென்கொரியாவில் வந்திறங்கிய 260 ராட்சத பலூன்கள்

வடகொரியாவிலிருந்து அனுப்பப்பட்ட பலூன்களுடன், மலம் மற்றும் குப்பை அடங்கிய 260 மூட்டைகள் தென்கொரியாவில் வந்திறங்கியுள்ளதைத் தொடர்ந்து, மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு தென்கொரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், தென்கொரிய ஆர்வலர்கள், நீண்ட நாட்களாகவே வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை பலூன்களில் கட்டி வடகொரியாவுக்கு பறக்கவிட்டுவந்துள்ளார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அது குறித்து தென்கொரியாவை எச்சரித்த வடகொரிய பாதுகாப்பு அதிகாரியான Kim Kang II என்பவர், தென்கொரியாவின் நடவடிக்கைக்கு பழிக்குப் பழி நடவடிக்கையாக, குப்பையும் அருவருப்பான விடயங்களும் தென்கொரிய எல்லையிலுள்ள பகுதிகளில் மழையாகப் பொழியும் என எச்சரித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, நேற்று முதல் இந்த ராட்சத பலூன்கள் தென்கொரியாவின் பல்வேறு இடங்களில் வந்திறங்கத் துவங்கியுள்ளன. அப்படி பலூன்கள் வந்திறங்கினால், அவை குறித்து ராணுவம் அல்லது பொலிசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு தென்கொரிய அரசாங்கம் தன் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Credit: EPA
வடகொரியாவின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது, மட்டமானது என விமர்சித்துள்ள தென்கொரிய அதிகாரிகள் அந்த மூட்டைகள் எதையும் தொடவேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அந்த மூட்டைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் இறங்கியுள்ளார்கள்.

Credit: EPA


Credit: EPA

Credit: EPA

Credit: AP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |