பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கர வெடிப்பு விபத்து: 7 பேர் உயிருக்காக போராட்டம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் திடீரென ஏற்பட்ட வாயு வெடிப்பு விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரிஸில் வாயு வெடிப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள 5th வட்டார(arrondissement) பகுதியில் மாலை 4.55 மணியளவில் திடீரென வாயு வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த எரிவாயு வெடிப்பு விபத்து சம்பவத்தில் அருகாமையில் இருந்த சில கட்டிடங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக 5வது வட்டார பகுதி மேயர் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
Breaking: There is a large fire in the 5th arrondissement after a gas explosion in Paris, France. pic.twitter.com/eed22DvxeU
— PM Breaking News (@PMBreakingNews) June 21, 2023
இதற்கிடையில் விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு பாரிஸ் நகர பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இல்லை
இந்நிலையில் சற்று பெரிய அளவில் ஏற்பட்ட இந்த வாயு வெடிப்பு விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை. ஆனால் 7 பேர் வரை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் 9 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விபத்தில் 2 பேர் வரை காணாமல் போய் இருப்பதாகவும், மொத்தமாக 24 பேர் தீ காயங்களுடன் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ள தகவலில், இந்த வெடிப்பு தீ விபத்தானது 5th அரோண்டிஸ்மென்ட்டில் Rue Saint-Jacques இல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவை ஜார்டின் டு லக்சம்பர்க் மற்றும் சோர்போன் பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |