ஒரே நாளில் ரூ.54,000 கோடி சொத்து அதிகரிப்பு., உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டாப்-20க்குள் நுழைந்த அதானி
ஒரே நாளில் ரூ. 54,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை உயர்த்தியுள்ள இந்திய தொழிலதிபர், இதன்மூலம் மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 19-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியாவில் தங்கள் வணிக சாம்ராஜ்யத்தை வெற்றிகரமாக நிறுவிய பல கோடீஸ்வர தொழிலதிபர்கள் உள்ளனர். பெரும்பாலானோர் பில்லியன் டொலர் சொத்து மதிப்பை கொண்டுள்ளனர். இருந்த போதிலும், தற்போது உலகின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் இரண்டு இந்திய தொழிலதிபர்கள் மட்டுமே உள்ளனர்.
பெரும் தொழிலதிபர்கள் எப்போதும் தங்கள் செல்வத்தை பெருக்க வழிகளை தேடுகிறார்கள். பல நிறுவனங்களைத் தொடங்குவைத்து மட்டுமின்றி, புதிய ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்கின்றனர்.
ரூ.464 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழக கிரிக்கெட் வீரர்., ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் முதலீடு
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி. உலகின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் நுழைந்துள்ளார். கடந்த சில நாட்களாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ஒரே நாளில் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது, அதாவது சுமார் ரூ.54,000 கோடி அதிகரித்துள்ளது. இதன் விளைவாக 66.7 பில்லியன் டொலர் நிகர மதிப்புடன் குறியீட்டில் 19-வது இடத்தைப் பிடித்துள்ளார் கௌதம் அதானி.
இதன்படி, கௌதம் அதானியின் தற்போதையை சொத்து மதிப்பு சுமார் ரூ.5,55,740 கோடியாகும். இது இலங்கை பணமதிப்பில் ரூ. 21,90,616 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்தின் 10 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கூர்மையான ஏற்றத்தைக் கண்டன. குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.
இதற்குப் பிறகு, ஜூலியா ஃப்ளெஷர் கோச் & குடும்பம் (64.7 பில்லியன் டொலர்), சீனாவின் ஜாங் ஷான்ஷன் (64.10 பில்லியன் டொலர்), அமெரிக்காவின் சார்லஸ் கோச் (60.70 பில்லியன் டொலர்) உள்ளிட்ட பில்லியனர்களை அதானி விஞ்சினார்.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 10 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு ரூ.11.31 லட்சம் கோடியாக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சுமார் ரூ.10.26 லட்சம் கோடியாக இருந்தது.
இதனிடையே, அதானி குழுமத்தின் மீதான மோசடி குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யக் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் விசாரித்து ஒத்திவைத்ததால், அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் வெள்ளிக்கிழமையும் உயர்ந்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
gautam adani net worth, Indian businessmen, top 20 world’s richest people list, Bloomberg Billionaires Index, Gautam Adani, Adani Group