ஆட்டுக்கு பிரியாணி போட்டது மட்டுமல்ல! அண்ணாமலையை விமர்சித்த காயத்ரி ரகுராம்
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வி அடைந்தது குறித்து காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
இந்தியாவுக்கான மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது.
பாஜக சார்பில் களமிறங்கிய நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அனைவரும் தோல்வியை தழுவியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.
காயத்ரி ரகுராம் பதிவு
இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஆட்டுக்கு பிரியாணி போட்டது மட்டுமல்ல, ஆட்டுக்கு வேலை செய்த சகுனிகளுக்கும் கூட பிரியாணி போட்டது நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நன்றி தமிழக மக்களே" என்று கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், "நடப்பது அனைத்தும் நன்மைக்கே, மக்கள் கொடுத்த தீர்ப்பை மனதார ஏற்கிறோம். அநீதிக்கு எதிராக அதிமுக என்றும் குரல் கொடுக்கும்.
எங்கள் தலைவர்களான பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றும் பொறுப்பை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.
நமது தலைவர் எடப்பாடியாரின் வழிகாட்டுதலுடன் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம். இப்போது வரை அ.தி.மு.க +20% வாக்குகள், அதிமுகவின் உண்மையான தொண்டர்களுக்கு நன்றி. நம் தலைவர்களை இதயத்தில் வைத்துள்ள தொண்டர்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |