நீ பாட நான் ஆட தில்லானா மோகனாம்பாள் தான்.., பாஜகவை விமர்சித்த காயத்ரி ரகுராம்
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடவுள்ள நிலையில் பாஜகவை காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.
இன்று மாலை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடவுள்ளார். இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொள்கிறார்.
விமர்சனம்
இந்நிலையில், அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் பாஜகவை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "பாஜகவில் இருந்து கலைஞரை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? கூட்டணியில் மகிழ்ச்சியாக இருப்பார்களா? அண்ணாமலையின் மயிலாப்பூர் வார்ரூம்.. குருமூர்த்தி சார் இருக்கீங்களா?
சனாதனம் என்பது டெங்கு மலேரியா கொசு என்று சொன்னவர்கள், அவர்களுக்கு முழு ஆதரவு. பிஜேபி தனது சித்தாந்தத்தில் இருந்து விலகி இந்துத்துவத்தில் இருந்து விலகி செல்கிறதா?
ஆளுநரும் அண்ணாமலையும் திமுகவுடன் தேநீர் அருந்தினர், பிரதமர் கலைஞரை நோக்கி வளைந்தார். உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்.
பின்னர் வரிசு அரசியலுக்காக அழ. நீ பாட நான் நடனமாட தில்லானாமோகனாம்பாள் எஃபெக்ட்" என்று கூறியுள்ளார்.
வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வழியாக தங்க கடத்தல்.., பூக்களுக்குள் மறைத்திருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள்
அதேபோல மற்றொரு பதிவில், "அனைத்து சிறுபான்மையினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. வெறும் ₹100 நாணயத்திற்கு ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி மற்றும் சிறுபான்மையினரை விட்டுகொடுத்துள்ளது திமுக.
மற்றும் பா.ஜ.க பெரிய உயிரியல் அல்லாத கடவுள் மோடி, சனாதன இந்துத்துவ விட்டுவிடுத்துள்ளார். என்ன ஒரு 7 பொருதம்.
பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் திமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் எதையும் செய்ய முடியும். மக்களும், கட்சிக்காரர்களும் ஏமாறுகிறார்கள். சித்தாந்தம் பகுத்தறிவு குப்பைத் தொட்டிக்கு சென்றது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |