ஜடேஜாவை தமிழக பாஜக தலைவராக ஆக்கி விடலாமா? அண்ணாமலையை சீண்டிய காயத்ரி ரகுராம்
சென்னை அணி இறுதிப் போட்டியில் வெல்ல பாஜக காரியகர்த்தா தான் காரணம், என்ற கூற்றுக்கு காயத்ரி ரகுராம் எதிர் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் கருத்து
ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் அணியும் மோதியது. இப்போட்டியில் சென்னை அணி கடைசி 2 பந்துகளுக்கு 10 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய சூழலில், ஜடேஜா ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி தேடி தந்தார்.
@ani
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘பாஜக காரிய கர்த்தாவான ஜடேஜா தான் சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார், ஜடேஜாவின் மனைவி ரிவபா ஒரு பாஜக எம்எல்ஏ ஆவார்’ என தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த கூற்றை, நெட்டிசன்கள் கலாய்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
காயத்ரி ரகுராம் கருத்து
இதற்கு பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை விமர்சித்து பதில் அளித்துள்ளார்.
@getty images
அவரது பதிவில் ‘சிறந்த காரிய கர்த்தாவாக இருப்பதற்காக ஜடேஜாவை தமிழக பாஜக மாநில தலைவராக்க முடியுமா? அவரை ஆக விடுவீர்களா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஜடேஜா தனது திறமையால் தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர், தனது அரசியலுக்காக அல்ல’ என அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.