அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! வீடியோ இருக்கு.. பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் விலகல்
பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து காயத்ரி ரகுராமின் அறிக்கையில், பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன்.
அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம். அனைத்து ஆதாரங்களை சமர்பித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன்.
அண்ணாமலை மலிவான, பொய் பேசும், அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர். நான் பாஜகவில் இருந்து விலகுவதற்கு அவர்தான் காரணம். என்னால் அவரது தலைமையின் கீழ் செயல்பட முடியாது. பெண்களே, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. என்னிடம் உள்ள ஓடியோ, வீடியோக்களை பொலிசிடம் வழங்கி, அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என புகாரளிக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
I have taken the decision with heavy heart to resign from TNBJP for not giving opportunity for an enquiry, equal rights & respect for women. Under Annamalai leadership women are not safe. I feel better to be trolled as an outsider.
— Gayathri Raguramm ??? (@Gayathri_R_) January 2, 2023
.@narendramodi .@AmitShah @JPNadda @blsanthosh
கடந்த நவம்பர் மாதம் காயத்ரி ரகுராமை காட்சியிலிருந்து நீக்கி அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில், பாஜக கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்ததால், காயத்ரி ரகுராம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கப்படுகிறாா் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
I’m ready to raise a police complaint To surrender all videos and audio’s. And to further investigate Annamalai. Sick person. And on War room which is troubling me..
— Gayathri Raguramm ??? (@Gayathri_R_) January 2, 2023