காசா நகரை விட்டு வெளியேறுங்கள்! மனிதாபிமான நெருக்கடியில் மக்கள்: இஸ்ரேல் எச்சரிக்கை
காசா நகரை விட்டு பொதுமக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் வெளியேற உத்தரவு
காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது, இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியுளனர்.
இந்நிலையில், காசா நகரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக தெற்கே உள்ள மனிதாபிமான பகுதிகளுக்கு செல்லும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிசாய் அத்ரே தெரிவித்த தகவலில், பொதுமக்கள் காசாவிலிருந்து வெளியேறி கான் யூனிஸ் கடற்கரை பகுதிக்கு உடனடியாக செல்ல வேண்டும் என அறிவித்துள்ளார்.
அங்கு காசா மக்களுக்கான உணவு, மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு காசா நகரை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிய ராணுவம் இதுவரை காசா நகரில் 40% பகுதிகளையும், முழு காசாவில் 75% பகுதிகளையும் கைப்பற்றி இருப்பதாக தெரிவித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |