உணவுக்காக பத்திரிக்கை உபகரணங்களை விற்கும் காசா புகைப்பட கலைஞர்: தலைவிரித்தாடும் பஞ்சம்!
காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஒருமுறை முட்டுக்கட்டையை எட்டியுள்ள நிலையில், முற்றுகையிடப்பட்ட காசா பகுதியின் பட்டினி நெருக்கடி உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.
காசா புகைப்படக் கலைஞரின் கோரிக்கை
இந்நிலையில் காசாவைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞரின் அவநம்பிக்கையான கோரிக்கை அங்குள்ள மோசமான நிலையை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அவர் இணையத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், "நான் காசாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் முகமது அபு அவுன். எனக்கும் என் குடும்பத்திற்கும் உணவு வாங்குவதற்காக என் உபகரணங்களையும், பத்திரிகை பாதுகாப்பு கவசத்தையும் விற்க விரும்புகிறேன்," என்று முகமது அபு அவுன் ஒரு லிங்க்ட்இன் பதிவில் எழுதியுள்ளார்.
இந்தப் பதிவு உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், காசாவின் பொதுமக்கள் மத்தியில் வளர்ந்து வரும் அவநம்பிக்கையின் ஒரு கொடூரமான சித்தரத்தையை வெளிக்காட்டுகிறது.
மனிதாபிமான நிலைமை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. பல மாதங்களாக, இஸ்ரேல் காசாவுக்குள் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் செல்வதை கடுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது.
இதனால் அப்பகுதி பஞ்சம் ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக உதவி நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இறப்புகள் இந்த மாதம் அதிகரித்துள்ளன. மனிதாபிமானப் பணியாளர்களும் கூட அடிப்படை வாழ்வாதாரத்தைக் கண்டறிய போராடுகிறார்கள்.
காசா நகரில் உள்ள ஒரு தொண்டு சமையலறையில் வெள்ளிக்கிழமை, நீண்ட வரிசைகளில் நின்றிருந்த மக்கள், பலர் காலிப் பாத்திரங்களுடன், நீர்த்துப் போன பருப்பு சூப்பை வாங்கக் காத்திருந்தனர்.
“ நாங்கள் மூன்று மாதங்களாக ரொட்டி இல்லாமல் வாழ்கிறோம்," என்று ஐந்து குழந்தைகளின் தாய் ரிஹாம் டுவாஸ் பகிர்ந்து கொண்டார். "நாங்கள் தொண்டு சமையலறைகளை நம்பி வாழ்கிறோம், ஒரு பானை பருப்புடன் உயிர்வாழ்கிறோம், பல நேரங்களில் அதுவும் கூட இல்லை." உணவு இல்லாதபோது தன் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று IV சலைன் ஏற்றப்பட்ட சோகமான யதார்த்தத்தை விவரித்துள்ளார்.
ஊசலாட்டத்தில் போர் நிறுத்தம்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ள நிலையில், இந்த ஆழமடைந்து வரும் பட்டினி நெருக்கடி வெளிப்படுகிறது.
தோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இருந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இருவரும் வெளியேறிய பிறகு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை தனது அரசாங்கம் "மாற்று விருப்பங்களை" ஆராய்ந்து வருவதாக அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |