காஸாவில் பிறந்த பெண் குழந்தைக்கு 'சிங்கப்பூர்' என பெயர்சூட்டிய நபர்: கூறிய காரணம்
காஸாவில் பிறந்த தனது பெண் குழந்தைக்கு நபர் ஒருவர் சிங்கப்பூர் என்று பெயர் சூட்டியுள்ளார்.
காஸா நபர்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான சண்டை இரண்டு ஆண்டுகளாக நீடித்தது.
அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

கல்லீரல் நோய்க்கு மாத்திரை எடுத்து வந்த கணவருக்கு.., 10 ஆண்டுகளாக HIV இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் மனைவி அதிர்ச்சி
ஆனாலும், வார இறுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய வீரர்கள் இரண்டு பேரை கொன்றதாக தகவல் வெளியானது.
பின்னர் இஸ்ரேலிய படைகளும் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் ஹம்தான் ஹதாத் என்ற நபர் தனது குழந்தைக்கு 'சிங்கப்பூர்' என்று பெயர் சூட்டியுள்ளார்.
சிங்கப்பூர்
கடந்த 16ஆம் திகதி பெண் குழந்தைக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக Love Aid Singapore சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது.
போரின்போது சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஒரு தொண்டு நிறுவனம் வழங்கிய உதவியைப் பாராட்டி, தங்கள் மகளுக்கு 'சிங்கப்பூர்' என்று பெயரிட்டதாக ஹம்தான் கூறியுள்ளார்.
இவர் காஸாவில் Love Aid Singapore நடத்தும் Soup kitchenயில் இரண்டு ஆண்டுகளாக சமையல் கலைஞராக பணியாற்றியவர் ஆவார்.
நெருக்கடியான நேரத்தில் தங்களை ஆதரித்த நாட்டைக் கௌரவிக்கும் வகையில் தங்கள் குடும்பம் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |