கல்லீரல் நோய்க்கு மாத்திரை எடுத்து வந்த கணவருக்கு.., 10 ஆண்டுகளாக HIV இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் மனைவி அதிர்ச்சி
கல்லீரல் நோய்க்கு மாத்திரை எடுத்து வந்த கணவருக்கு 10 ஆண்டுகளாக HIV இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார் மனைவி.
HIV இருப்பது கண்டுபிடிப்பு
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள ஒரு பெண், தனது கணவருக்கு கடுமையான கல்லீரல் நோய் இருப்பதாக நம்பி பத்து வருடங்களாக சிவப்பு நிற மாத்திரைகளை கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து, டிசம்பர் 2021 இல் சட்டவிரோத கேசினோவை நடத்தியதற்காக கணவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது, கணவருக்கு எச்.ஐ.வி (எய்ட்ஸ்) மருந்தைக் கோரியபோது மனைவி அதிர்ச்சியடைந்தார்.
2011 ஆம் ஆண்டில் அவருக்கு எச்.ஐ.வி இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது திருமணமாகி பத்து வருடங்கள் ஆன பிறகும் இந்த தகவலை அவரது வருங்கால மனைவியிடமிருந்து மறைத்து வைத்திருந்தார் கணவர்.
பின்னர் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு கணவர் மாத்திரைகள் எடுக்கத் தொடங்கியபோது, அவர் தனது மனைவியிடம் கல்லீரல் பிரச்சனைக்காக மாத்திரைகள் சாப்பிடுவதாக பொய் சொன்னார்.
"இந்த மாத்திரைகள் எய்ட்ஸ்க்கு என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. கல்லீரலுக்கு நோய்க்கு என்று கணவர் கூறிய போது நான் நம்பினேன்" என்றார் மனைவி.
மேலும், கணவர் சிறையில் தனது செயல்களை நியாயப்படுத்தி வைரஸைக் கட்டுக்குள் வைத்திருந்ததாகவும், தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைத்ததாகவும் கூறினார்.
இதுபோன்ற போதிலும், திருமணமான ஆரம்ப ஆண்டுகளில் பாதுகாப்பற்ற உடலுறவின் போது தனக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மனைவி கவலைப்பட்டார்.
பின்னர் உடனடியாக எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொண்ட மனைவி க்கு முடிவுகள் எதிர்மறையாக வந்தாலும், "நாங்கள் பல ஆண்டுகளாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல் ஒன்றாக வாழ்ந்தோம். எனக்கு தொற்று ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" என்று கூறினார் மனைவி.
பின்னர் அவர் தனது கணவருக்கு எதிராக சட்டப்பூர்வ உதவியை நாடினார். மோசடி மற்றும் துரோகம் என்று குற்றம் சாட்டி, திருமணத்தை ரத்து செய்யுமாறு மனு செய்தார்.
யுன்னான் நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்து, திருமணம் செல்லாது என்று அறிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |