ஹமாஸ் ஒப்படைத்த உடல்கள் பிணைக் கைதிகளுடையது இல்லை! இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஹமாஸ் ஒப்படைத்த உடல்கள் பிணைக் கைதிகளின் உடல்கள் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பிணைக் கைதிகள் ஒப்படைப்பு குழப்பம்
கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் படையினரால் காசாவிலிருந்து ஒப்படைக்கப்பட்ட 3 உடல்கள் காணாமல் போன 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உடல்கள் இல்லை என்று இஸ்ரேலிய தரப்பு வழங்கிய தகவல்படி தெரியவந்துள்ளது.
ஹமாஸ் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இந்த உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் இதையடுத்து இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் அசோசியேட்டட் பிரஸிடம் வழங்கிய தகவலில், ஒப்படைக்கப்பட்ட உடல்கள் காசாவில் சிறைப்பிடிக்கப்பட்ட எந்தவொரு நபரின் அடையாளங்களுடன் பொருந்தவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த வார தொடக்கத்தில் காசா மீது வான்வழித் தாக்குதலை நடத்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.
இதில் 100 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |