காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவிகிதம் பெண்களும் சிறார்களும்... ஐ.நா தகவல்
காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போரில் கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர்கள் பெண்கள் மற்றும் சிறார்கள் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெண்களும் குழந்தைகளும்
காஸாவில் போரின் முதல் ஆறு மாதங்களில் கொல்லப்பட்டவர்களில் 8,119 பேர்களை உறுதி செய்ததாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் கூறியது. அதில் 3,588 சிறார்கள் மற்றும் 2,036 பெண்கள். மேலும், பாலஸ்தீன அதிகாரிகள் கூறிவரும் இறப்பு எண்ணிக்கையான 43,000 என்பது அதிக எண்ணிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் கொல்லப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் பெரும் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற கூற்றை ஐ.நா ஆதரிக்கிறது. சரிபார்க்கப்பட்ட எண்ணிக்கையில் 7,607 பேர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது அதுபோன்ற வீடுகளில் கொல்லப்பட்டனர்.
அதில் 44 சதவிகிதம் குழந்தைகள், 26 சதவிகிதம் பெண்கள் மற்றும் 30 சதவிகிதம் ஆண்கள் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான சிறார்கள் அதிகமாக பலியாகியுள்ளனர்.
ஐந்து முதல் 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இழந்த 484 குடும்பங்களைச் சரிபார்த்துள்ளதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி, முழுக் குடும்பங்களும் தங்களுடைய தங்குமிடங்களில் ஒன்றாகக் கொல்லப்படுவது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறுவது பற்றிய கவலையை அதிகரிக்கிறது.
தெற்கு இஸ்ரேலில்
18 தாக்குதல் சம்பவங்களில் 138 உறுப்பினர்களை மொத்தமாக இழந்துள்ளது நஜ்ஜர் குடும்பம். இதில் 35 பெண்கள் மற்றும் 62 சிறார்களும் உட்படுவார்கள். இன்னொன்று அல் அஸ்டல் குடும்பம்.
8 தாக்குதல் சம்பவத்தில் 33 பெண்கள் மற்றும் 45 சிறார்கள் உட்பட 94 பேர் கொல்லப்பட்டனர். 2023 அக்டோபர் 7ல் ஹமாஸ் படைகள் தெற்கு இஸ்ரேலில் நடத்திய துப்பாக்கிச் சூடில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேலின் இராணுவம்.
அத்துடன் காஸாவில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இதுவரை பார்த்துக் கொண்டுள்ளதாக கூறி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |