சமூகவலைதள தடைக்கு எதிரான போராட்டம் - துப்பாக்கிசூட்டில் 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தின் சமூகவலைதள தடைக்கு எதிரான போராட்டத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தில் சமூகவலைதள தடை
நேபாளத்தில் கடந்த வாரம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைப்படி பதிவு செய்யாத 26 சமூகவலைத்தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது.
இந்த தடையில், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்நாப்சேட் உள்ளிட்ட பிரபல சமூகவலைத்தளங்களும் உள்ளன.
சமூகவலைத்தளங்களில் பலரும் போலியான கணக்கை உருவாக்கி அதன் மூலம், வெறுப்பு மற்றும் போலிசெய்திகளை பரப்புவதாகவும், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சமூகவலைத்தளத்தின் மீதான தடை கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வீதிகளுக்கு வந்து போராட்டத்தை தொடங்கினர்.
நேபாள தலைநகர் காத்மாண்ட்டில் போராட்டம் தீவிரமடைந்து, நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
14 பேர் உயிரிழப்பு
இந்த ஊர்வலத்தில், "ஊழலை ஒழிப்போம், சமூக ஊடகங்களை அல்ல", "சமூக ஊடகங்களைத் தடை செய்யாதே", போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் தேசியக் கொடியை ஏந்தியிருந்தனர்.
காவல் துறையினரின் தடுப்புகளை உடைத்து, போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்றனர்.
இதனையடுத்து காத்மாண்ட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கண்ணீர் புகை மற்றும் ரப்பர் தோட்டக்களை பயன்படுத்தி, கூட்டத்தை கலைத்தனர்.
இதனால், போராட்டக்காரர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே ஏற்பட்ட மோதலில், 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், 100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |