பாரிஸ் ஒலிம்பிக்கில் பரபரப்பை ஏற்படுத்திய குத்துச்சண்டை வீரர் உண்மையில்... கசிந்த தகவல்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய அல்ஜீரிய குத்துச்சண்டை வீரர் தொடர்பான மருத்துவ ஆவணங்கள் கசிந்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிறப்பால் ஒரு ஆண்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வென்றவர் அல்ஜீரிய குத்துச்சண்டை வீரரான 25 வயது Imane Khelif. தற்போது இவர் தொடர்பான மருத்துவ ஆவணங்கள் கசிந்துள்ள நிலையில், அவரது பதக்கங்களை பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கசிந்த ஆவணங்களில் Imane Khelif உண்மையில், பிறப்பால் ஒரு ஆண் என அம்பலமாகியுள்ளது. 2023ல் பதிவு செய்யப்பட்ட கெலிஃப்பின் மருத்துவ அறிக்கையில் அவருக்கு கருப்பைகள் இல்லை என்பதை பதிவு செய்துள்ளனர்.
மட்டுமின்றி, அவருக்கு இருக்கும் ஒரு குறைபாடு தொடர்பில் விளக்கமளித்துள்ள மருத்துவ நிபுணர்கள், அது உண்மையில் பிறப்பால் ஆண் ஒருவருக்கே ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கெலிஃப் தொடர்பான இருவேறு மருத்துவ ஆவணங்கள் 2023 மே மாதம் முதல் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விசாரணையில் இருந்துள்ளதாகவும் ஆனால், பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர் மகளிர் பிரிவில் களமிறக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், IOC இந்த விவகாரத்தில் ஒரு முழுமையான விசாரணையைத் தொடங்கி தங்கப் பதக்கத்தை ரத்து செய்யுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கண்ணீருடன் வெளியேறிய
டெல்லியில் நடந்த பெண்கள் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில், உரிய மருத்துவ சோதனையில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் ஓராண்டுக்கு பின்னர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அவர் களமிறங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி வெறும் 46 வினாடிகளில் போட்டியில் இருந்து கண்ணீருடன் வெளியேறியதை அடுத்து Imane Khelif சர்வதேச கவனம் பெற்றார்.
மட்டுமின்றி, கெலிஃப் ஒரு ஆண் என்றே குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் வெளிப்படையாக கூறி வந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |