அநாதரவாக இறந்து கிடந்த நடிகர்: சொத்துத் தகராறுக்கு தயாராகும் பிள்ளைகள்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் தன் வீட்டில் அநாதரவாக தனது மனைவியுடன் இறந்துகிடந்தார்.
அப்போது அவர்களைக் கண்டுகொள்ளாத அந்த நடிகரின் பிள்ளைகள், தற்போது தந்தையின் சொத்துக்காக சண்டை போடத் தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அநாதரவாக இறந்து கிடந்த நடிகர்
சூப்பர்மேன் போன்ற திரைப்படங்களில் நடித்த, இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்ற நடிகர் ஜீன் ஹாக்மேன்.
ஜீன் ஹாக்மேன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரின் உடல்களும் மம்மியாக்கப்பட்ட நிலையில், அதாவது உலர்ந்து சுருங்கிப்போன நிலையில் சென்ற மாதம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
சொத்துத் தகராறுக்கு தயாராகும் பிள்ளைகள்
கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும், இப்படி அநாதரவாக இறந்துகிடந்தார் ஜீன் ஹாக்மேன்.
இப்போது, அவரது பிள்ளைகள் தங்கள் அப்பாவின் சொத்துக்காக சண்டை போட தயாராவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜீன் ஹாக்மேனுக்கும் அவரது முதல் மனைவியான Faye Malteseக்கும் பிறந்த பிள்ளைகள் மூன்று பேர். மூத்த மகன் கிறிஸ்டோபர், அடுத்த மகள் எலிசபெத், மூன்றாவது மகள் லெஸ்லி.
1986ஆம் ஆண்டு தம்பதியர் பிரிய, 1991ஆம் ஆண்டு பெற்சியைத் திருமணம் செய்துகொண்டார் ஜீன் ஹாக்மேன்.
ஜீன் ஹாக்மேன் தன் சொத்துக்களை தன் மனைவி பெற்சி பேருக்கு உயில் எழுதி வைத்துள்ளார். பெற்சியோ, தொண்டு நிறுவனங்களுக்கு சொத்துக்களை எழுதிவைத்துள்ளதாக தெரிகிறது.
பெற்றோரை பிள்ளைகள் சரியாக கவனித்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால், சொத்துக்களுக்காக வழக்குத் தொடர, புகழ் பெற்ற சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்துள்ளாராம் ஜீன் ஹாக்மேனின் மூத்த மகனான கிறிஸ்டோபர்.
அடுத்து, மகள்களும் சொத்துத் தகராறுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீன், பெற்சி தம்பதியரின் சொத்துக்களின் மதிப்பு 80 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |