புடினால் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றவருக்கு 8.5 ஆண்டுகள் சிறை! பதவியும் பறிப்பு
ரஷ்யாவில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இராணுவ மேஜர் ஜெனரலுக்கு 8.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது
2024யில் ஜனாதிபதி விளாடிமிர் புடினால் இராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றவர் 46 வயதாகும் டெனிஸ் புடிலோவ் (Denis Putilov).
ஆனால், இவர் பதவி உயர்வு பெற்ற நான்கு மாதங்களில் (செப்டம்பர்) லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு அமைச்சகம் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கு இடையில், சுடினோவ் என்ற நபரிடம் 140 மில்லியன் ரூபிள் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
குறித்த நபர், இராணுவ வாகனங்களை பழுதுபார்த்து சேவை செய்வதற்காக தொழில்முனைவோராக அடையாளம் காணப்பட்ட ஒப்பந்ததாரர் ஆவார்.
இந்த ஒப்பந்தங்களை மேற்பார்வையிடும் அதிகாரியான டெனிஸ் புடிலோவ் ஆதரவாளிக்கும் விதமாக சுடினோவிடம் இருந்து 10 மில்லியன் ரூபிள் பணத்தை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.
8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை
இந்த நிலையில், குறித்த ஒப்பந்தங்கள் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை என்றும், இதனால் அரசுக்கு குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்பட்டது என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளி என நிரூபணம் ஆன பின்னர் டெனிஸ் புடிலோவிற்கு 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த புலனாய்வுக்கு குழுவின் அறிக்கையில், டெனிஸ் புடிலோவின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விடுவிக்கப்பட்ட பிறகு ஆறு ஆண்டுகளுக்கு மூத்த அரசாங்க பதவிகளை வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |