ஒரே நாளில் சுவிஸ் விமான நிலையம் ஒன்றில் குவிந்த பயணிகளால் குழப்பம்
சுவிஸ் விமான நிலையம் ஒன்றில் ஒரே நாளில் 80,000 பயணிகள் குவிந்ததால் குழப்பம் உருவானது.
ஒரே நாளில் குவிந்த 80,000 பயணிகள்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா விமான நிலையத்தில், சனிக்கிழமையன்று 80,000 பயணிகள் குவிந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து வீடு திரும்புவோர், வார இறுதி என ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களால் பயணிகள் குவிய, அவர்களுடைய உடைமைகளை சுமந்துவரும் அமைப்பு பழுதானது.

அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பயணிகளின் உடைமைகள் ஆங்காங்கே விடப்பட்டதால் பெரும் குழப்பம் உருவானது.
நிலைமை நேற்று சீரடைந்தாலும், நேற்றும் பயணிகள் வருகை அதிகமாகவே இருந்தது.
2020ஆம் ஆண்டில் ஒருமுறை சுமார் 77,400 பயணிகள் ஒரே நாளில் ஜெனீவா விமான நிலையத்தில் குவிந்த நிலையில், சனிக்கிழமை 80,000 பயணிகள் அங்கு குவிந்தது ஜெனீவா விமான நிலைய வரலாற்றில் இடம்பெற்றுள்ள விடயமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |