இளைஞரின் உடலிலிருந்து மூளையை அகற்றிய மருத்துவமனை: பெற்றோர் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தில், விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் மூளையை, அவரது பெற்றோரின் அனுமதியின்றி மருத்துவமனை அகற்றிய விவகாரம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மூளையை அகற்றிய மருத்துவமனை
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் விபத்தொன்றில் பலியானார் அலெக்சாண்டர் என்னும் இளைஞர்.

பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு இறுதிச்சடங்குகளை எல்லாம் முடித்த நிலையில், அலெக்சாண்டரின் மூளையை அவரது உறவினர்களின் அனுமதியின்றி மருத்துவமனை அகற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளதால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Romandy University Centre of Forensic Medicine என்னும் பல்கலை, விபத்து சார்ந்த வழக்குக்கு பயன்படும் என்பதற்காக அலெக்சாண்டரின் மூளையை அகற்றியுள்ளது. அது தெரியாமலேதான் அவரது உறவினர்கள் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளனர்.
ஆக, மருத்துவ வழக்குக் காரணங்களுக்காகவே இருந்தாலும், ஒருவரது உறவினர்களுக்குத் தெரியாமல் அவரது உடலிலிருந்து ஒரு உறுப்பை அகற்றுவது சரியா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |